Monday, 12 December 2011

வானுலகுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு



வானுலகுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு எத்தகையது? எதன் மூலம் தொடர்பு ஏற்படுகிறது?

நம்மிடம் தோன்றும் எண்ணங்களால் இந்த பிரபஞ்சம் பாதிக்கப்படுகிறது.பொறாமை, கோபம், முறையற்ற காமம்,வன்மம்,நயவஞ்சகம் முதலான எண்ண அலைகளால் பிரபஞ்சம் பாதிக்கப்படுவதால் தான் ஆங்காங்கே வெள்ளம்,பூகம்பம்,பஞ்சம் போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன.
தூய எண்ணங்கள், நற்சிந்தனைகள்,இறை சிந்தனை ஆகியவைகளால் பிரபஞ்சம் தூய்மையடைகிறது.பித்ருக்களையும், தெய்வங்களையும் அவரவர்களது முறைப்படி வழிபட்டால் அவர்கள் நமக்கு பல நன்மைகளைச்செய்கிறார்கள்.
வான் மண்டலத்தில் உள்ள கோள்களும் பாதிப்பை விளைவிக்கின்றன.ஒவ்வோருவரும் செய்யும் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் பிரகிருதி பார்த்துக் கொண்டே இருக்கிறது.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் அதனுடைய பலன்கள்
அதற்கான காலகட்டத்தில் வந்தே தீரும்.

No comments:

Post a Comment