Thursday, 15 December 2011

பற்றி எரிகிறதா தமிழகம்?

சென்னை : முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும், என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஒரு மண்ணும் புரியலை. இப்போ தமிழகத்துல என்ன கலவரமா நடக்குது, இது சம்பந்தமா? சும்மா நாலைஞ்சு பேரு அறிக்கை விட்டுக்கிட்டு பம்மாத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க, அம்புட்டு தான். ஏதோ தமிழகமே பத்தி எரியறா மாதிரி இவர் பேசிக்கிட்டிருக்காரு.
புதுதில்லி, டிச.1: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான யாசின் பக்தல் என்கிற இம்ரான் பற்றி தகவல் தருவோருக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி போலீசார் அறிவித்துள்ளனர்.
ரெண்டு நாள் முன்னாடி 6 முஸ்லீம் தீவிரவாதிகளை கைத் பண்ணினாங்க. எவ்வளவு நடந்தாலும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பதில்லைன்னு குரல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க, ரொம்ப நல்லவய்ங்க. கேட்டா இவனுங்க பண்ணின எழவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கணக்குல எழுதுறதுக்கு, அண்டப்புளுகு கதை ஒண்ணை பத்து பக்கத்துக்கு எழுதி வலையில சுத்த விடுவாங்க.
சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அணையின் நீர்த்தேக்க அளவை 142 அடியாக உயர்த்த ஆவன செய்க என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவங்க என்ன நினைப்புல இருக்காங்க, என்ன ஏதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த மாதிரி புரட்சித்தலைவி அம்மா சிரிப்பு மூட்டக் கூடாது. இதெல்லாம் ரொம்ப…. அதிகம்.
சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறைக் காக்க டிசம்பர் 7-ம் தேதி பிரசாரப் பயணமும், டிசம்பர் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
சாகும்வரை உண்ணாவிரதம்னு ஏதாவது பண்ணினாலாவது கொஞ்சம் பயனிருக்கும். அத விட்டுட்டு ஆறுமணி நேர உண்ணாவிரதம் இருக்கறதுக்கும் கருணாநிதி கடற்கரைல போட்ட நாடகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
சென்னை, டிச.1: முல்லைப் பெரியாறு அணை குறித்த விவரங்களை வெள்ளியன்று பிரதமரைச் சந்தித்து அதிமுக எம்பிக்கள் மனு கொடுக்கவுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அதானே, நம்ம மானில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாம மொத்தமா சேர்ந்து போய் மனு கொடுத்தா ஒலகம் அழிஞ்சிடுமே. அம்மாவுக்கு தான் உலகத்து மேல எவ்வளவு அக்கறை!
பிற்படுத்தோர் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தல்
இது தினமணியோட ஒரு செய்தித் தலைப்பு. ‘பிற்படுத்தப்பட்டோர்’னு போடறதுக்கு பதிலா ‘பிற்படுத்தோர்’னு போட்டிருக்காங்க. இப்டி அடிக்கடி பிழைகள் வருது, சொன்னா உடனே திருத்திக்கிறாங்க, ஆனா எத்தனை தடவை சொல்றது, இதையெல்லாம் சரி பாக்க மாட்டீங்களா ஐயா? சொன்னாலும் சில சமயம் திருத்திக்கிறது கிடையாது.

No comments:

Post a Comment