Thursday, 15 December 2011

நவம்பர் 17, 2011

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

Filed under: அரசியல்,செய்தி விமர்சனம் — கிருமி @ 12:54 பிற்பகல் 
கள்ளக்குறிச்சி, நவ. 16: கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள அணைக்கரை கோட்டாலத்திலுள்ள மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், புதன்கிழமை திறந்து வைத்தார்.
அட பைத்தியக்காரங்களா! அணையில இருந்து தண்ணிய ஆண்டுக்கு ஆண்டு திறந்து விடுறது நீர்ப்பாசனத் துறையோட கடமை. இதுக்கு ஏன்யா மந்திரி வரவேண்டியிருக்கு?
மந்திரி வந்து சாவி போட்டாத்தான் அணை மதகு திறக்குமா? அதுக்கு ஒரு விழா வச்சி,  மைக் செட் போட வசூல் பண்ணி, கணக்கும் காட்டுவீங்க! ஏன்யா இப்டி மக்கள் துட்டையும் நேரத்தையும் வீணாக்கறீங்க?
சென்னை, நவ. 16: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதில், கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.
முன்னவர் கடிதங்களை எழுதி தவறாது அனுப்பிக் கொண்டிருந்தார். இவர் நடுவண் அரசைக் குற்றம் சாட்டி, கடிதமும் எழுதுகிறார் அவ்வளவுதான். நிலைமை அப்படியே தான் இருக்கிறது. தாக்கப்படுவது தமிழன் அல்ல இந்தியன் என்று மைய அரசுக்கு உணர்த்த
முயல்வது வீண் செயல். தெரிந்தே வாளாயிருக்கும் நடுவண் அரசை மீறி வாளெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று நோக்குவதே தக்க செயலாயிருக்க முடியும்.
பைஸாபாத், நவ.17: யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தின் பைஸாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிபியா. சிரியா நாடுகளின் வரிசையில் இந்தியாவிலும் அரசுக்கு
எதிராக கிளர்ச்சி செய்ய ராம்தேவ் ஏற்பாடு செய்கிறார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகமது அலி என்ற சமூக சேவகரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட கூடுதல் சிவில் நீதிபதி பாகிரதி வர்மா விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சரிய்யா! கிளர்ச்சியை எதுக்கு ஏற்படுத்த முயற்சி செய்யறாரு? ஊழலையும், ஊழல் புரியும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து தானே! இதுக்கு க்ரிமினல் வழக்கு போடுவீங்களா?   கேட்டா, அவருக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்குன்னு சொல்லுவீங்க. ஏன்யா,
கோடீசுவரன் ஊழலை எதிர்க்கக் கூடாதா? கோடீசுவரன், கிளர்ச்சி செய்யக்கூடாதா?  கோடீசுவரன் நியாயம் பேசக்கூடாதா?
சென்னை, நவ.17: ரசாயன உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டதால், விவசாயிகள் பெருந்துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். உரங்கள் கிடைக்காமல், கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. உர விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, மாநில அரசுகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் நாளை பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக உண்ணாநிலை அறப்போர் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பலத்த மழை பெய்து வருவதாலும், தொடர்ந்து மழை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும், இந்த உண்ணாநிலை அறப்போர் ஒத்தி வைக்கப்படுகின்றது.
ரசாயன உரங்களை பயன்படுத்தாம இயற்கை உரங்களுக்கு மாறுங்கன்னு எல்லாருக்கும் அறிவுரை சொல்லி பிரச்சாரம் செய்யறதை விட்டுட்டு, ரசாயன உர விலைய குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தறது, கேனத்தனமா இருக்கு.
ஆமா, இதை ஏன் நீங்க அழகிரி வூட்டு வாசல்ல நடத்தக் கூடாது?
மழை பெய்ஞ்சா, உண்ணாவிரதம் இருக்க முடியாதா என்ன? மொத்தத்துல விளம்பரத்துக்கு எதையாவது செய்யறீங்கன்னு தெரியுது!
புதுதில்லி, நவ.17: இனிவரும் காலங்களில் பெட்ரோல் விலையை 2 வாரத்துக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
அட நாசமாப்போறவங்களா! நாடு தாங்குமாய்யா! எந்த விலையையும் கட்டுக்குள்ள வைக்க முடியாத அரசும் ஒரு அரசா! அந்த அரசன் தலையில இடி விழ!

No comments:

Post a Comment