241. பாலை
[பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.]
துனியின் றியைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவரென முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியாக் காதலொடு உழைய ராகிய
நமர்மன் வாழி தோழி யுயர்மிசை (5)
மூங்கில் இளமுளை திரங்கக் காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப மழைமறந்து
அருவி யான்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத் தோடித்
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை (10)
புலம்பெயர்ந் துறைதல் செல்லா 1தலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும் (15)
2நன்மர மருங்கின் மலையிறந் தோரே.
-காவன் முல்லைப் பூதனார்.
(சொ - ள்.) 5. தோழி-, வாழி-,
1-5. முனியாது நல்குவர் - என்னை வெறாது அருளுவார் ஒருவர், துனி இன்று இயைந்த துவரா நட்பின் - வெறுப்பின்றி ஒன்றிய என்றும் பிளவுபடாத நட்பினையுடைய, இனியர் - இனிய குணங்களையுடையர், அவர் என - நம் தலைவர் என, நல்ல கூறினும்-அவரது நற்குணங்களைப் பாராட்டிக் கூறினும், அல்கலும்-என்றும், பிரியாக் காதலொடு-நம்மை விட்டுப் பிரியாத காதலுடன், உழையர் ஆகிய-நம் பக்கலில் உள்ளார் ஆகிய, நமர் - நம் காதலர் (இப்பொழுது);
5-16. உயர் மிசை-மலையின் உச்சிக்கண்ணே யுள்ள, மூங்கில் இளமுளை திரங்க-மூங்கிலின் இளைய முளை வதங்கவும், காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப-மூங்கில்தண்டு ஒலிக்கும் பெரிய பாறையின் இடங்கள் வெம்பவும், மழை மறைந்து - மழை பெய்யாது மறந்து போதலின், அருவி ஆன்ற - அருவி இல்லையாகிய, வெருவரு நனந்தலை -அச்சம் வரும் அகன்றஇடத்தே தோன்றிய, பேஎய் வெண் தேர்பெயல் செத்து ஓடி-வெள்ளிய பேய்த்தேரை மழையென்று கருதி ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை - தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான், புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது-அவ்விடத்தினின்றும் மீண்டு உறைதல் மாட்டாது, அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு - அப் பேய்த்தேர் அசையும் இடமாய புதியவெவ்விய காட்டின்கண்ணே, வருந்தி வைகும்-வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும், அத்தம் நெல்லி தீம் சுவை திரள் காய்-பாலைநிலவழியில் உள்ள நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள் ஆகிய, வட்ட கழங்கில் - வட்டமான கழங்குகளைக் கொண்டு, துய் தலை செம்முக மந்தி தாஅய் ஆடும்-பஞ்சு போன்ற மயிரையுடைய தலையினையும் சிவந்த முகத்தையுமுடைய மந்தி தாவி விளையாடும், நல்மர மருங்கின் மலையிறந்தோர் - நல்ல மரங்கள் பொருந்திய பக்கத்தையுடைய மலையினைக்கடந்து சென்றார் ஆதலின் ஆற்றகில்லேன்.
(முடிபு) தோழி! வாழி! முனியாது நல்குவர், ஒருவர் ‘நட்பின் இனியர் நம் தலைவர்’ என நல்ல கூறினும், பிரியாக் காதலோடு உழையர் ஆகிய நமர், மலையிறந்தோர்; ஆதலின் ஆற்றகில்லேன் என்றாள்.
(வி - ரை.) முனியாது நல்குவர் என்றது, தோழியைப் பிறர் போற் கூறியதாகும். இனி அவர் நட்பின் இனியர், நல்குவர் என நீ முனியாது நல்ல கூறினும் என்றுரைத்தலுமாம். மறந்து-மறத்தலால். பேஎய்த்தேர் - வெண்டேர் எனவும்படும். தாகம் என்றது தாஅம் என விகாரமாயிற்று. புலம்-வேறு நற்புலம் என்றுமாம். அலங்குதலை-வருந்துதற் கேதுவாகிய இடமுமாம்.
(பாடம்) 1.அலங்கு நிலை. 2. நீன்மரம்
[பதிப்பு: பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார், மறுபதிப்பு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.]

No comments:
Post a Comment